We the Leader இயக்கத்தின் சேவை நோக்கங்களை ஆதரிக்கிறோம்; அரசியல் ரீதியாக மக்கள் நீதி மையத்திலேயே தொடர்வோம்: MNM நிர்வாகிகள்
மக்கள் நீதி மையத்தின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பி. பாலமுருகன், வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் எஸ். சுரேஷ் மற்றும் வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் ஆர். முகிலன் ஆகியோர் We the Leader இயக்கத்தின் நிறுவனர் கே. அண்ணாமலை மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கரு. நாகராஜனை சந்தித்தனர்.
சென்னை: மக்கள் நீதி மையம் (MNM) கட்சியின் வேளச்சேரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பாலமுருகன், வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் எஸ். சுரேஷ் மற்றும் வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் ஆர். முகிலன் ஆகியோர், We the Leader இயக்கத்தின் சேவை நோக்கங்களை ஆதரிப்பதாகவும், அரசியல் ரீதியாக மக்கள் நீதி மையத்திலேயே தொடர்ந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், மூவரும் We the Leader இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கரு. நாகராஜனை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளரிடம் பேசிய ஆர். முகிலன், தாம் தெரிவித்த கருத்துகள் மூவரின் பொதுவான நிலைப்பாடு என்றும் கூறினார்.
அவர் கூறுகையில்,
"நாங்கள் கரு. நாகராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். We the Leader தற்போது ஒரு சமூக–அரசியல் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. அதன் சேவை நோக்கங்களை நாங்கள் வரவேற்கிறோம். அரசியல் ரீதியாக நாங்கள் அனைவரும் மக்கள் நீதி மையத்திலேயே தொடர்ந்து செயல்படுவோம்."
மேலும்,
"எதிர்காலத்தில் We the Leader இயக்கம் அரசியல் கட்சியாக உருவெடுத்தால், அந்தக் கட்சிக்கும் மக்கள் நீதி மையத்திற்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி. அது எங்களின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே. தற்போது அரசியல் ரீதியாக மக்கள் நீதி மையத்தில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்." என்றார்.
இதன்மூலம், We the Leader இயக்கத்தின் சமூகச் சேவை நோக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மூவரும், தங்களது அரசியல் பயணம் மக்கள் நீதி மையத்துடனேயே தொடரும் என்ற நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளனர்.

Tamil Amuthan
2026-07-28 19:30:07this is my comment
Tamil Amuthan
2026-07-28 19:31:19the good way