தமிழகத்தில் 150 நாட்கள் ஊரக வேலைவாய்ப்பு: கூடுதல் 25 நாட்களுக்கு ₹100 கோடி ஒதுக்கீடு!
சென்னை: கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்குவதற்காகத் தமிழக அரசு ₹100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் குடும்பங்கள் ஒரு நிதியாண்டில் மொத்தம் 150 நாட்கள் வரை வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
