SIR விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக களமிறங்கிய CJP
Tamil Amuthan · Oct 02, 2026
Cockroach Janta Party (CJP), இந்திய தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR) நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. SIR நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக CJP குற்றம்சாட்டுகிறது. குறிப்பாக, வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் எழுந்ததாக வெளியான கருத்து வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டி, தேர்தல் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை தேவை என அந்த அமைப்பு வலியுறுத்துகிறது
